மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சாக்லெட் பாயாக இருந்த ஷாம், சமீபகாலமாக காக்கி சீருடையில் போலீஸ் அதிகாரியாக நடித்து வந்தார். தற்போது அவர் வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார். ஆனால் அது இங்கல்ல கன்னடத்தில் ஸ்ட்ரெய்ட் பார்வேர்ட் என்ற படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இதில் யஷ் ஹீரோவாகவும், ராதிகா பண்டிட் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். படம் தீபாவளிக்கு வெளிவருகிறது. வில்லனாக நடித்திருப்பது பற்றி ஷாம் கூறியதாவது:
6 படம் வெளியான பிறகுதான் தெலுங்கு, கன்னடப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. இப்போது நான் நடித்துள்ள கன்னடப் படம் ஸ்ட்ரெய்ட் பார்வர்ட் தீபாவளியன்று வெளிவருகிறது. கன்னடத்தில் இது எனக்கு மூன்றாவது படம். புறம்போக்கு வரை காக்கிச்சட்டை போட்டு போலீஸ் வேடங்களில் தோன்றி வந்த எனக்கு, இதில் மாறுபட்ட வேடம். இதில் நான் ஒரு கேங்ஸ்டராக வருகிறேன். தேவ் என்பது என் பாத்திரத்தின் பெயர். தனியாக எனக்குத் தீம் சாங் உண்டு. நான் வரும் போதெல்லாம் அது ஒலிக்கும் . தனி ஒருவன் அரவிந்தசாமி மாதிரி இந்தப் படம் வந்ததும் நான் பேசப்படுவேன்.
இந்தப் படம் தீபாவளிக்கு வருகிறது. நான் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். இதுவரை தீபாவளிக்கு என் படம் வந்ததில்லை. எனவே இந்தத் தீபாவளி எனக்கு உற்சாகமான ஒன்றாகியிருக்கிறது. தமிழில் காவியன் படத்தில் நடித்து வருகிறேன். தெலுங்கில் சுரேந்தர் ரெட்டியின் புதிய படத்தில் நடிக்க இருக்கிறேன். என்கிறார் ஷாம்.