அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
பாலிவுட்டில் 20 வருடத்திற்கு மேலாக முன்னணியில் இருந்து வரும் நடிகர் ஷாரூக்கான். தற்போது இவர் இயக்குநர் கவுரி ஷிண்டே இயக்கியுள்ள ‛டியர் ஜிந்திகி' படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு தொலைக்காட்சி பேட்டியில் ஷாரூக்கானை நடிகை கிருத்தி சனோன் புகழுந்து கூறியுள்ளார்.
இதைபற்றி கிருத்தி சனோன் கூறியதாவது...."நான் ஷாரூக்கான் உடன் ‛தில்வாலே' படத்தில் இணைந்து பணியாற்றினேன். அவரை பார்த்ததும் ரொம்ப பிடித்துவிட்டது. நான் பாலிவுட்டில் நடிப்பதற்கு முன்பே ஷாரூக் தீவிர ரசிகை. பொதுவாக நாம் யாருடைய ரசிகராக இருக்கிறோமோ அவர்களை பார்க்க முடியாது என்பார்கள், ஆனால் எனக்கு அப்படியில்லை. ஷாரூக்கை பற்றி நன்றாக தெரிந்து கொண்டால் அவர் மேல் இன்னும் காதல் அதிகரிக்கும்" என்றார்.
கிருத்தி சனோன், அடுத்தப்படியாக ‛ராப்தா ' படத்தில் நடிக்கயிருக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு துவங்கயிருக்கிறது என்று படக்குழு தெரிவித்து உள்ளனர்.