மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்து வருகின்றார். இப்படத்தைத் தொடர்ந்து, மகேஷ் பாபு ஸ்ரீமந்துடு படத்தின் இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார். அண்மையில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் மோகன்லால் எனும் இரு பிரபலங்களை இணைத்து ஜனதா கேரேஜ் எனும் சூப்பர் ஹிட் படம் கொடுத்த கொரட்டாலா சிவா, மீண்டும் இரு பிரபலங்களை இணைத்து படம் இயக்கவுள்ளாராம். மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறதாம். ஏற்கனவே வெங்கடேஷுடன் இணைந்து நடித்த மகேஷ் பாபு, பாலகிருஷ்ணாவுடன் நடிக்கவும் ஒகே சொல்லிவிட்டாராம். கௌதமிபுத்ர சடர்கனி எனும் சரித்திர படத்தில் நடித்து வரும் பாலகிருஷ்ணாவிடம் கொரட்டலா சிவா பேச்சு வார்த்தையில் இறங்கியுள்ளார்.