மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் காஷ்மோரா. கோகுல் இயக்கி உள்ளார், இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைய்லர் கேரள ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளால் சுமார் 200 தியேட்டர்களில் காஷ்மோரா வெளியாகிறது. இந்த நிலையில் கொச்சி சென்ற கார்த்தி அங்கு நடந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பேசியதாவது...
காஷ்மோரா என் கேரியரில் முக்கியமான படம். கோகுல் கதை சொன்னதும் இதில் நடிக்கலாம், நிச்சயம் ஜெயிக்கும் என்பது தெரியும். ஆனாலும் இதற்கான பட்ஜெட் பெருசு. அதுதான் யோசிக்க வைத்தது. ஆனால் தயாரிப்பாளர் தைரியமாக ஏற்றுக் கொண்டார். பிளாக் மேஜிக் செய்யும் காஷ்மோரா, படைத்தளபதி ராஜ் திலக், இளவரசி ரத்னமாதேவி இந்த மூவரைச் சுற்றிய கதை. எனக்கு இரட்டை வேடம் கிடையாது. இரண்டும் தனித்தனி கேரக்டர்கள்.
நிறைய உழைப்பையும் பணத்தையும் கொட்டி எடுத்திருக்கிறோம். இந்தப் படத்தின் மூலம் நிறைய காஸ்ட்யூம் டிசைனர், குதிரை பயிற்சியாளர்கள் என பல புதிய கிராப்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தற்போது சரித்திர படங்கள் எடுக்கப்படாததால் இவர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்தார்கள். அவர்களை அழைத்து வந்து வேலை கொடுத்திருக்கிறோம். இயக்குனர் கோகுல் நடித்து காட்டியபடி நான் நடித்திருக்கிறேன். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என்றார்.