மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இந்த தீபாவளிக்கு தனுஷின் கொடி, கார்த்தியின் காஷ்மோரா ஆகிய இரண்டு மெகா படங்களுடன் மேலும் சில படங்களும் ரிலீசாகிறது. ரஜினி, விஜய், அஜீத் போன்ற மேல்தட்டு ஹீரோக்களின் படங்கள் எதுவும் இல்லாததால் தனுஷ்-கார்த்தி ஆகிய இருவரும்தான் இந்த தீபாவளியின் கிங் நடிகர்களாக உள்ளனர். அதேசமயம், அஜீத் நடித்து வரும் 57-வது படம் குறித்த ஏதேனும் தகவல்கள் தீபாவளிக்கு வெளியாகலாம் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதற்கான எந்த அறிவிப்பும் இல்லாததால் அவரது ரசிகர்கள் உற்சாகமிழந்து காணப்படுகின்றனர்.
ஆனால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பைரவா படத்தின் டைட்டீல் அறிவிக்கப்பட்டதில் இருந்து உற்சாகத்தில் இருக்கும் அவர்கள், இந்த தீபாவளி தினத்தன்று பைரவா படத்தின் டீசர் வெளியாகயிருப்பதால் படம் வெளியாகாதபோதும், டீசர் வெளியிட்டை விழாவாக கொண்டாடுவோம் என்று தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், பைரவா படத்தின் முக்கிய காட்சிகளை கட் பண்ணி உருவாக்கியிருக்கும் 3 டீசர்களை
சில தினங்களுக்கு முன்பு பார்த்த விஜய், அதில் ஒன்றை செலக்ட் பண்ணியிருக்கிறாராம். அந்த டீசரைத்தான் தீபாவளி தினத்தன்று வெளியிடுகிறார்களாம்