விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
வம்சம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் அருள்நிதி. திமுக., தலைவர் கருணாநிதியின் பேரனான இவர் தொடர்ந்து மெளன குரு, டிமான்டி காலனி, நாலு போலீஸூம் நல்லா இருந்த ஊரும், ஆறாது சினம், உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ராதா மோகன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
இதனிடையே அருள்நிதிக்கும், சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதியின் மகள் கீர்த்தனாவுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. சில மாதங்களில் கீர்த்தனா கர்ப்பமானார். இந்நிலையில் கீர்த்தனாவிற்கு பிரசவ வலி ஏற்பட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள். தனக்கு, ஆண் குழந்தை பிறந்ததை அருள்நிதி தன் டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.