மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
தற்போதைய நிலவரப்படி தீபாவளி விருந்தாக நான்கு படங்கள் வெளியாக உள்ளன. ஆனாலும் காஷ்மோரா, கொடி ஆகிய படங்கள் மட்டுமே ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய படங்களின் பட்டியலில் உள்ளன. என்ன ஆச்சர்யம் பாருங்கள்? காஷ்மோரா, கொடி ஆகிய இரண்டு படங்களிலும் உள்ள சில ஒற்றுமைகள் உள்ளன.
காஷ்மோரா, கொடி என இரண்டு படங்களின் முதல் எழுத்துமே K என்ற ஆங்கில எழுத்தில் தொடங்குகிறது. நடிகர் கார்த்தி இதுவரை 13 படங்களில் நடித்துள்ளார். இதில் இவர் இரட்டை வேடம் ஏற்று நடித்துள்ளார். நடிகர் தனுஷ் 30 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். கொடி படம்தான் அவருக்கு முதல் இரட்டை வேட படம்.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரௌத்திரம் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் கோகுல் இயக்கும் 3ஆவது படம் காஷ்மோரா. எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களைத் தொடர்ந்து ஆர்.எஸ்.துரைசெந்தில் குமாருக்கும் இயக்கும் மூன்றாவது படம் கொடி.
காஷ்மோரா, கொடி இரண்டு படங்களுக்குமே இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்தான். காஷ்மோரா, கொடி இரண்டு படங்களிலுமே இரண்டு கதாநாயகிகள் உள்ளனர். காஷ்மோரா படத்தில் இளவரசியாக நயன்தாராவும்,நிருபராக ஸ்ரீதிவ்யாவும் நடித்துள்ளனர். கொடியில் அரசியல்வாதியாக த்ரிஷாவும், கிராமத்துப் பெண்ணாக அனுபமா பிரமேஸ்வரனும் நடித்துள்ளனர்.