இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஜெயம்ரவி நடித்த எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து அறிமுகமானவர் ஸ்ரீகாந்த் தேவா. அதன்பிறகும் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வந்த அவரது மார்க்கெட் ஒருகட்டத்தில் சரிந்து போனது. என்றாலும், அவ்வப்போது தான் இசையமைக் கும் படங்களில் ஒரு ஹிட் பாடலையாவது கொடுத்து தன்னை மார்க்கெட்டில் தக்க வைத்துக்கொண்டு வருகிறார் ஸ்ரீகாந்த்தேவா.
அதோடு, ஜித்தன் படத்தில் ஆ முதல் அக்குதானடா என்ற பாடலை கொடுத்த வர், ஜித்தன்-2 படத்திலும் அதே பாணியில் சின்ன குட்டி நாதனா சிம்கார்ட மாத்துனா -என்றொரு குத்துப்பாடலை கொடுத்தார். இந்த நிலையில், தற்போது ஆரி நடிப்பில் உருவாகி வரும் நாகேஷ் திரையரங்கம் படத்திலும் ஒரு அதிரடியான குத்துப்பாடலுக்கு இசையமைத்துள்ளார் ஸ்ரீகாந்த் தேவா. நாட்டுப்புற இசை கலந்து உருவாகியுள்ள இந்த பாடலை மெகா ஹிட் பண்ணி விட வேண்டும் என்பதற்காக ஒரு பாடலுக்காக 50க்கும் மேற்பட்ட டியூன்களை உருவாக்கி அதிலிருந்து ஒரு டியூனை செலக்ட் பண்ணி ரெக்கார்டிங் செய்துள்ளாராம் ஸ்ரீகாந்த் தேவா. இந்த பாடலில் பட நாயகன் ஆரி- ஆஷ்னா சாவேரி இருவரும் அதிரடியான குத்தாட்டம் ஆடப்போகிறார்களாம்.