ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கெளதம்மேனன் இயக்கத்தில் நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படத்தை அடுத்து சிம்பு நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தில் மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார் சிம்பு. ஒவ்வொரு கெட்டப்புக்காகவும் கடினமாக உழைத்து வரும் சிம்புவின் மதுரை மைக்கேல் கெட்டப்பின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கெட்டப்பை அடுத்து தற்போது 60 வயது அஸ்வின் தாத்தாவாக நடித்துககொண்டிருக்கிறார் சிம்பு.
அந்த வகையில், இந்த படத்தில் அவருக்கு ஜேடியாக ஸ்ரேயா, தமன்னா நடித்து வரும் நிலையில், இன்னொரு முன்னணி நடிகையிடமும் பேசி வருகிறார்கள். இந்நிலையில், இந்த படம் சம்பந்தப்பட்ட போஸ்டர், டீசர் என்று ஒவ்வொன்றையும் அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஆதிக் ரவிச்சந்திரன், தற்போது சிம்புவின் அஸ்வின் தாத்தா கெட்டப்பின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், நின்று கொண்டிருக்கும் ஒரு காரை சிம்பு தம்கட்டி தூக்குவது போலவும், அவரை கட்டிப்பிடித்தபடி அதை ஆச்சர்யத் துடன் தமன்னா பார்ப்பது போலவும் அந்த போஸ்டர் வெளியாகியிருக்கிறது.