ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 7-ந்தேதி வெளியான படம் ரெமோ. பாக்யராஜ் கண்ணன் இயக்கிய இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். இரண்டுவிதமான விமர்சனங்களை சந்தித்த இந்த படமும் சிவகார்த்திகேயனுக்கு வெற்றியாக அமைந்துள்ளது. அதனால் இந்த உற்சாகத்தோடு அடுத்தபடியாக மோகன்ராஜா இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி விட்டார்.
மேலும், ரெமோ படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டு தமிழக அரசின் வரிவிலக்கும் கிடைத்தது. ஆனால், தற்போது ரெமோ என்பது தமிழ் வார்த்தை அல்ல என்று சொல்லி அப்படத்திற்கான வரி விலக்கை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதோடு, ரெமோ என்பது லத்தின் வார்த்தை, ஜெர்மன், இத்தாலிய மொழிகளில் வழக்கில் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வழக்கு விசாரித்த நீதிபதி சிவஞானம், ரெமோ என்ற வார்த்தை குறித்து சரியான பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று சொல்லி, ரெமோ பட வழக்கை நவம்பர் 21ந்தேதிக்கு தள்ளி வைத்து விட்டார்.