ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அரசியல் பாரம்பரியத்தில் இருந்து வந்தபோதும், இதுவரை அரசியல் கதைகளில் நடிக்கவில்லை உதயநிதி. காதல், காமெடி கலந்த கதைகளிலேயே அதிகமாக நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்ததில் மனிதன் படத்தில் அவரது பர்பாமென்ஸ் ஓரளவு பேசப்பட்டது. அதையடுத்து இன்னும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய கதைகளாக தேடிப்பிடித்து நடிக்கத் தொடங்கியிருக்கும் உதயநிதி, தற்போது சேலத்தில் முகாமிட்டு, பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அவருடன் பார்த்திபன், சூரி, மயில்சாமி, நிவேதா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படமும் கிராமத்து காதல் கதைதான் என்றாலும், ஊராட்சி மன்ற தேர்தல் காட்சிகளும் படத்தில் உள்ளதாம். அதில் உதயநிதி போட்டியிடும் காட்சிகளும் உள்ளதாம். அவரை எதிர்த்து பார்த்திபன் போட்டியிடு வாராம். இந்த காட்சிகளின்போது உதயநிதிக்கு பெரிய அளவில் கட்அவுட், பேனர்கள் வைத்து படமாக்கியுள்ளாராம் இயக்குனர் தளபதி பிரபு. அதேசமயம், தேர்தல் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சீரியசாக இல்லாமல் காமெடியாக படமாக் கப்பட்டுள்ளதாம். அந்த வகையில், இதற்கு முன்பு தனது படங்களில் சந்தானத் துடன் இணைந்து காமெடி கலாட்டா செய்து வந்த உதயநிதி, இந்த படத்தில் சூரியுடன் இணைந்து பெருங்கலாட்டா செய்கிறாராம்.