'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தனுஷ், த்ரிஷா நடித்துள்ள படம் கொடி. இதில் முதன்முறையாக தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். முதன் முதலாக நடித்துள்ள அரசியல் படமும் இதுதான். எதிர் நீச்சல், காக்கி சட்டை படங்களை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கி உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார், எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார்.
இந்தப் படம் தீபாவளியையொட்டி வருகிற 28ந் தேதி வெளிவருகிறது. இதை ரசிகர்களிடம் கொண்டு செல்ல களத்தில் இறங்குகிறார் தனுஷ். காரணம் போட்டிக்கு நிற்பது பிரமாண்டமாக தயராகி உள்ள கார்த்தி, நயன்தாரா நடித்த கஷ்மோரா. இதனால் பட ரிலீசுக்கு முன்பு தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சென்று நிகழ்ச்சிகள், பேட்டிகள் மூலம் புரமோசன் செய்கிறார் தனுஷ். அதன்படி வருகிற 25, மற்றும் 26ந் தேதிகளில் சேலம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை நகரங்களுக்குச் செல்கிறார். தனுசுடன் த்ரிஷா, பாடலாசிரியர் அருண் காமராஜா, நடிகர் காளி வெங்கட், தயாரிப்பாளர் மதன் ஆகியோரும் உடன் செல்கிறார்கள்.