'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர்கான், இவரது நடிப்பில் இருமாதங்களில் வெளியாக இருக்கும் படம் ‛டங்கல்'. இருதினங்களுக்கு முன்னர் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் அமீர்.
பொதுவாக அமீர் பொது விழாக்களில் கவனமுடன் இருப்பார். தேவையில்லாமல் பேசமாட்டார், குறிப்பாக மனைவியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றால் மிகவும் கன்னியமாக நடந்து கொள்வார். இந்நிலையில், மும்பை திரைப்பட விழாவின் துவக்கவிழாவில் அமீர், தன் மனைவியுடன் பங்கேற்றார். அப்போது அமீர் வழக்கத்திற்கு மாறாக பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தன் மனைவி கிரண் ராவ்விற்கு லிப்லாக் முத்தம் கொடுத்து மகிழ்ந்தார். முதன்முறையாக அமீர்கான் மீடியா முன்னர் தன் ரொமான்ட்டிக்கை வெளிப்படுத்தியிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளதுடன், அவரிடத்தில் ஏன் இந்த திடீர் மாற்றம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.