ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ்த் திரையுலகில் 'கபாலி' படத்தின் டீசர் மட்டுமே மாபெரும் சாதனையைப் படைத்தது. அந்த அளவிற்கு ரஜினிகாந்த் உலக அளவில் உள்ள தமிழ்த் திரைப்பட ரசிகர்களை ஈர்த்துள்ளார் என்று அனைவருமே பாராட்டித் தள்ளினோம். ஆனால், ரஜினிகாந்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆமீர்கானின் 'டங்கல்' பட டிரைலர் 24 மணி நேரத்திற்குள்ளேயே மாபெரும் சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பாக 20ம் தேதி காலை 'டங்கல்' டிரைலர் வெளியானது. டிரைலர் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே யு டியூபில் மட்டும் 90 லட்சம் பார்வைகளை இந்த டிரைலர் பெற்று புதிய சாதனை ஒன்றைப் படைத்தது. ஆமீர்கானின் ஃபேஸ்புக் பக்கத்தில் 36 லட்சம் பேரும், ஒரே நாளில் பார்த்துள்ளனர். யு டியூபில் மட்டும் இதுவரை ஒரு கோடியே 51 லட்சம் பார்வைகளையும், ஆமீர்கானின் ஃபேஸ்புக் பக்கத்தில் 43 லட்சம் பேரும் பார்த்துள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்று யு டியூப் டிரென்டிங்கிலும் முதலிடத்தில் உள்ளது.
அதே சமயம் அதற்கு ஒரு நாள் முன்னதாக வெளியான ஷாரூக்கானின் 'டியர் ஜிந்தகி' டீசர் இதுவரை 68 லட்சம் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்தப்படத்தை ஸ்ரீதேவி நடித்த 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தை இயக்கிய கௌரி ஷின்டே இயக்குகிறார்.
ஆமீர்கானின் 'டங்கல்' பட டிரைலர் சாதனை இந்தியத் திரையுலகத்தினர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.