ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் சங்கத்தின் தலைவர், சமக தலைவர், எம்.எல்.ஏ. என கடந்த வருடம் வரை பிசியாக இருந்தார் சரத்குமார். இப்போது நடிகர் சங்கத்தின் தலைவர், மற்றும் எம்.எல்.ஏ. பதவிகளில் அவர் இல்லை. எனவே மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்தார் சரத்குமார். சரத்குமார் தமிழில் கடைசியாக நடித்த படம் - 'சண்டமாருதம்'. அந்தப் படத்துக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார் சரத்குமார். அதன்படி ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்கும் 'அடங்காதே' என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். தற்போது ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார் சரத்குமார்.
கன்னட பட உலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான புனீத் ராஜ்குமார் கதாநாயகனாக நடிக்கும் படம் 'ராஜகுமாரா'. இப்படத்தில்தான் சரத்குமார் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்தில் பிரியா ஆனந்தும் நடிக்கிறார். இதற்கு முன்பும் சரத்குமார் சில கன்னட படங்களில் நடித்துள்ளார்.