ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி திரைப்பட வர்த்தக சபை சார்பில் சிறப்பு யாகம் நடந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலம்பெற வேண்டி அவரது கட்சியினர் பல்வேறு ஆன்மீக நிகழ்வுகளை நடத்துகிறார்கள்.
இந்த நிலையில் முதல்வர் பூரண நலம்பெற தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை பிரமாண்ட யாகம் ஒன்றை நடத்தியது. சென்னை, அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள வர்த்தக சபை கட்டிடத்தில் இந்த யாகம் இன்று(அக்., 21) நடந்தது. இந்த யாகம் மிருத்யுஞ்ஜய மூல மந்திர ஜெபம், மற்றும் மஹா மிருத்யுஞ்சய யாகம் என்று அழைக்கப்படுகிறது.
இதில் திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் கல்யாண், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, உறுப்பினர்கள் டி.சிவா, தியாகராஜன், ஆர்பி.சவுத்ரி, கதிரேசன், இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன், ரமேஷ் கண்ணா, பெப்சி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.