விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
பாலிவுட்டில் மோஸ்ட் வாண்ட்ட ஹீரோவாக இருப்பவர் நடிகர் அக்ஷய் குமார். சில மாதங்களுக்கு முன் வெளியாகி வசூலை குவித்த படம் ‛ருஸ்டம்'. இப்படத்தில் அக்ஷய் உடன் முக்கிய வேடத்தில் நடிகை இஷா குப்தா நடித்து இருந்தார். தற்போது ‛பாத்சாஹோ' படத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இஷா, அக்ஷய்யுடன் ரொமான்ஸ் செய்ய வேண்டும், எனக்காக அவர் அழ வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இதைப்பற்றி இஷா கூறியதாவது..... "அக்ஷய் உடன் ரொமான்ட்டிக் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. எனக்காக அக்ஷய் பாடுவதும், மரங்களை சுற்றி டூயட் பாடுவதையும் பார்க்க வேண்டும், அக்ஷய் உடன் ஒரு படத்திலாவது நான் ரொமான்ட்டிக் காட்சிகளில் நடித்து விட்டாலே போதும், இந்த சினிமாவில் நான் வெற்றி பெற்றதாகவும், பெருமையாகவும் கருதுவேன். எனக்காக அக்ஷய் சிரிக்கணும், அழுகணும், பாடணும்" என்று கூறியுள்ளார்.