'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய் தொலைக்காட்சி டப்பிங் சீரியலை ஒளிபரப்புவதில் சரித்திர சாதனை படைத்து வருகிறது. விஜய் டி.வியின் தாய் டி.வியான ஸ்டார் பிளஸ்சில் ஒளிபரப்பாகும் அத்தனை டப்பிங் சீரியல்களையும் இறக்குமதி செய்கிறது. அந்த வரிசையில் அடுத்து களம் இறக்குகிறது சந்திர நந்தினியை.
இது முன்பு ஒளிபரப்பான பழைய தொடர் அல்ல. கடந்த 10ந் தேதி முதல் ஸ்டார் பிளஸ்சில் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய இந்தி சரித்திர தொடர். அதனை அப்படியே சுடச்சுட டப் செய்து ஒளிபரப்ப இருக்கிறது விஜய் டி.வி. வருகிற 31ந் தேதி முதல் ஒளிபரப்பை தொடங்குகிறது. திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகிறது.
ஏக்தா கபூர், ஷோபா கபூர் இதனை வடிவமைத்துள்ளனர். சந்திரகுப்த மவுரியரின் வாழ்க்கையை கதையை மையமாக கொண்டு கதை பின்னப்பட்டுள்ளது. ராஜன் குமார் சிங் இயக்குகிறார். ரஜத் டோக்ஸ் சந்திரகுப்த மவுரியராக நடிக்கிறார். ஸ்வேதா பாசு பிரசாத் நந்தினியாக நடிக்கிறார். தனுகான் துருதராக நடிக்கிறார்.