விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
பாலிவுட்டில் 20 வருடத்திற்கு மேலாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் அமீர் கான். தற்போது இவர், நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‛டங்கல் படத்தில் , மல்யுத்த மாவீரர் போகத்தின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்காக தனது உடல் எடையை குறைத்தும், அதிகரித்தும் நடித்து வருகிறார் அமீர்கான். சில தினங்களுக்கு முன், அமீர் கான் ‛டங்கல் படத்தின் டிரைலரை தீபாவளியன்று வெளியிட போவதாக கூறியிருந்தார். ஆனால் தற்போது ‛டங்கல் படத்தின் டிரைலர் அக்டோபர்- 20 தேதி வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதைப்பற்றி பாலிவுட் வட்டாரத்தில் விசாரித்ததில் டங்கல் படத்தின் டிரைலரை தீபாவளி அன்று வெளியிட்டால் டிரைலருக்கு வரவேற்பு கிடைக்காது, ஏனென்றால் தீபாவளி அன்று அஜய் நடிப்பில் உருவாகி வெளிவரயிருக்கும் ‛சிவாய் படமும், இயக்குநர் கரண் ஜோகர் இயக்கத்தில் ரன்பீர் கபூர், அனுஷ்கா ஷர்மா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‛ஏய் தில் ஹே முஷ்கில் படமும் வெளியாக இருக்கிறது. அன்றைய தினம் பெரும்பாலும் தீபாவளி படங்களை பற்றி மக்கள் அதிகம் பேசுவர், ஆகையால் தான் ‛டங்கல் படத்தின் டிரைலர் இந்த மாதம் 20 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
டங்கல் படம் 2016, டிசம்பர் மாதம் 23ம் தேதி வெளியாகயிருக்கிறது.