Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

அப்பாவை விட அம்மா திறமைசாலி! : ஐஸ்வர்யா

13 அக், 2016 - 04:11 IST
எழுத்தின் அளவு:
my-mother-is-more-Talented-than-the-father!-:-Aishwarya

பட்டத்து யானை படத்தில், விஷால் ஜோடியாக அறிமுகமானவர், ஆக் ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா; தற்போது காதலின் பொன் வீதியில் என்ற படத்தில், அர்ஜுன் இயக்கத்தில் நடித்து வருகிறார்; அவர் அளித்த பேட்டி:


காதலின் பொன் வீதியில் படம் பற்றி சொல்லுங்க?


இந்த படம், எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்; ஏனென்றால், என் அப்பாவே இந்த படத்தை இயக்குகிறார். காதல் கதை தான். ஆனால், வித்தியாசமாக சொல்லியிருக்கிறோம். இந்த படத்தில் நிருபர் வேடத்தில் நடிக்கிறேன். நிறைய வீடியோ பார்த்து, இந்த வேடத்துக்காக பயிற்சி எடுத்தேன்.


அப்பா இயக்கத்தில் நடிக்கும்போது, பயமா இருந்ததா?


கொஞ்சம் பயம் இருந்தது உண்மை தான். ஆனால், கனவு மாதிரி இருந்தது. இருந்தாலும், எனக்கு எந்த பிரச்னையும் வராமல், நான் நடிக்கும் காட்சிகளை சுமுகமாக கையாண்டார், அப்பா. அதேநேரத்தில், படப்பிடிப்பில், என்னை மகளாக பார்க்காமல், ஒரு இயக்குனர், நடிகையை எப்படி நடத்துவாரோ, அதேபோல் தான் நடத்தினார். நானும், படப்பிடிப்புக்கு வரும்போது, அவர் என் அப்பா என்பதை மறந்து, இயக்குனராகவே பார்ப்பேன்.


படத்தோட ஹீரோ பற்றி?


புதுமுகம் சந்தன் என்பவர் அறிமுகம் ஆகிறார்; நல்ல நடிகர். நன்றாக நடனமாடவும் அவருக்கு தெரியும். இந்த படத்தின் ஆக் ஷன் காட்சிகளுக்காக தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார். ரசிகர்களுக்கு கண்டிப்பாக அவரை பிடிக்கும்.


எந்த மாதிரி படங்களில் நடிக்க ஆசை?


எல்லா படங்களிலும் நடிக்க ஆசை. நான் நடிப்புக்கு புதியவள். எனக்கு இன்னும் நிறைய அவகாசம் இருக்கு; பார்க்கலாம். ஒரே மாதிரி கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க விரும்பவில்லை. வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டும்.


யாருடைய இயக்கத்தில் நடிக்க ஆசை?


என் அப்பா இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை, நிறைவேறியுள்ளது. இதேபோல், மணி ரத்னம், ஷங்கர் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.


அப்பா, அம்மாவிடம் கற்ற விஷயங்கள் என்ன?


நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். இப்போதுவரை, கற்றுக் கொண்டு தான் இருக்கிறேன். அம்மாவும் நடிகையாக இருந்தவங்க தான். அப்பாவும், அம்மாவும், பெரிய போராட்டத்துக்கு பின்தான், இந்த இடத்துக்கு வந்திருக்கின்றனர். அப்பா, சினிமாவில் மட்டுமல்ல; நிஜ வாழ்க்கையிலும், பைட்டர் தான். அப்பாவை விட, அம்மா இயல்பான நடிகை; ரொம்ப திறமைசாலி; பரதநாட்டியம் ஆடுவதில் கைதேர்ந்தவர்.


சினிமா தவிர வேற என்ன தெரியும்?


சினிமா தவிர, பெரிதாக எதுவும் தெரியாது; கதக் டான்ஸ் கத்துகிட்டேன்; பேஷன் டிசைனிங்கிலும் ஆர்வம் இருக்கு.


புதுமுகங்களால் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியவில்லையே...


ஒவ்வொருவருக்கும், ஒரு குறிக்கோள் இருக்கும். ஆனால், இது எல்லாத்துக்குமே கடின உழைப்பு தேவை. நாம் யார் என்பது முக்கியமல்ல; எப்படி உழைக்கிறோம் என்பது தான் முக்கியம்.


உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்கள்?


அட கடவுளே; என்கிட்டேயே இந்த கேள்வியா; எனக்கு தனுஷ், அஜித், விஜய் பிடிக்கும். இவர்களைவிட, முக்கியமான ஒருத்தரை ரொம்ப பிடிக்கும்; திறமையான அந்த நடிகரின் பெயர் அர்ஜுன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in