அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நடிகர் அஜய் தேவ்கன், சமீபத்தில் தான் சிவாய் படத்தில், சிவாய் என்ற கேரக்டரில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 28 ம் தேதி, ஏய் தில் ைஹ முஷ்கில் படத்துடன் ரிலீசாக உள்ளது. அஜய் தேவ்கன், தற்போது சிவாய் படத்தின் புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் இவரிடம், சல்மான் கானும், கரன் ஜோகரும் பாகிஸ்தான் நடிகர்களுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது பற்றி கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த அஜய், அவர்கள் என்ன சூழ்நிலையில் அப்படி பேசினார்கள் என எனக்கு தெரியாது. இது எனது கருத்து மட்டுமே. நான் எனது நிலைப்பாட்டை பற்றி மட்டும் பேசுகிறேன். மீண்டும் பாகிஸ்தான் திரையுலகும், நாங்களும் ஒன்று சேருவதற்கான வாய்ப்பு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை என்றார்.