தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அஜய் தேவ்கன், தற்போது நடித்து, இயக்கி, தயாரித்துள்ள படம் சிவாய். இதை தனது கனவுப்படம் என்றே கூறும் அஜய், படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் சிவாய் படம் பற்றிய காமிஸ் புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளார். இதற்கான விழா மும்பையில் வருகிற அக்., 23ம் தேதி நடக்கிறது.
இதுப்பற்றி அஜய் கூறியிருப்பதாவது... ‛‛பொதுவாக காமிக்ஸ் புத்தகங்களில் இருந்து தான் சினிமா படங்களை உருவாக்குவார்கள். ஆனால் இப்போது ஒரு படத்தை காமிக்ஸ் புத்தகமாக வெளியிட உள்ளோம். படத்தில் உள்ளதை அப்படியே புத்தகத்தில் வெளியிட உள்ளோம்'' என்று கூறியுள்ளார். சிவாய் படம் வருகிற அக்., 28-ம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது.