ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகராகவும், சில படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்தவர் ஜாக்கி ஷெராப். இவரது மகன் டைகர் ஷெரப். தற்போது பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான இவர் நடனம் மட்டுமல்லாது சண்டை காட்சிகளிலும் அசத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‛பிளையிங் ஜாட்' படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
தற்போது இவர், இயக்குநர் சப்பீர் கான் இயக்கத்தில், விக்கி ரஜனி மற்றும் ஈராஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் ‛முன்னா மைக்கேல்' படத்தில், முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றார். அவருக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கிறார். சமீபத்தில் நடத்த ஒரு நிகழ்ச்சியில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தது படக்குழு. அதன்படி, ‛முன்னா மைக்கேல்' படம் அடுத்த ஆண்டு, ஜூலை மாதம் 7ஆம் தேதி (07.07.17) வெளியாகும் என்று அறிவித்துள்ளது.