தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு, ‛எம்எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற பெயரில் உருவாகி, அதில் தோனியாக சுசாந்த் சிங் ராஜ்புட் நடித்திருந்தார், நீரஜ் பாண்டே இயக்கியிருந்தார். ஹிந்தி தவிர்த்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் வெளியாகியுள்ள தோனி படம், கடந்த வெள்ளியன்று திரைக்கு வந்தது. விமர்சன ரீதியாக மட்டுமல்லாது படத்தின் வசூலும் கலக்கி கொண்டிருக்கிறது. இப்படம் வெளியான முதல்நாளே ஷாரூக்கான், அமீர்கான், சல்மான்கானின் படங்களுக்கு சமமாக வசூலை குவித்துள்ளது. அதாவது முதல்நாளில் மட்டும் ரூ.21.30 கோடி வசூலித்தது.
இந்நிலையில் தற்போது மூன்று நாட்களில் ரூ.66 கோடி வசூலித்திருக்கிறது. படம் வெளியான முதல்நாளான வெள்ளியன்று ரூ.21.30 கோடியும், சனியன்று ரூ.20.60 கோடியும், ஞாயிறு அன்று ரூ.24.10 கோடியும் வசூலித்திருக்கிறது. இந்தாண்டில் வெளியான படங்களில் சுல்தான் படத்திற்கு பிறகு அதிக வசூலை குவித்த படமாக தோனி திகழ்கிறது. இன்னும் சில தினங்களிலேயே சுலபமாக தோனி ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைய உள்ளது.