Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அன்றுதான் ஆரம்பம்... த்ரிஷாவின் நினைவலைகள்!

01 அக், 2016 - 17:44 IST
எழுத்தின் அளவு:
The-day-it-all-began---Trisha

தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது, தெலுங்குத் திரையுலகத்திலும் சில வருடங்கள் முன்னணி ஹீரோயின்களில் நம்பர் 1 ஹீரோயினாக இருந்தவர். திரையுலகத்தில் அறிமுகமாகி 14 வருடங்கள் ஆனாலும் இன்னமும் ஹீரோயினாக மட்டுமே வலம் வந்து கொண்டிருக்கிறார். வரும் தீபாவளிக்கு தனுஷுடன் நடித்துள்ள 'கொடி' படம் வெளியாக உள்ளது. அதற்கடுத்து 'மோகினி' படம் வெளிவர உள்ளது. அரவிந்த் சாமியுடன் 'சதுரங்க வேட்டை 2' படத்திலும் ஜோடி சேர உள்ளார். 2017லும் பிஸியான த்ரிஷாவைத்தான் பார்க்க முடியும்.


த்ரிஷா நடிகையாவதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக இருந்தவர். அதன்பின் நடந்த மிஸ் சென்னை 1999 போட்டியில் வெற்றி பெற்றார். அது நடந்து நேற்றுடன் 17 வருடங்கள் முடிந்துள்ளது. அதை நினைவுபடுத்தும் விதத்தில் அந்தப் புகைப்படத்துன் தன் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார் த்ரிஷா.


“அந்த நாளில்தான் அனைத்தும் ஆரம்பமானது. அதன் பின் பின்னால் போனதே இல்லை,” என தன்னைப் பற்றி கடவுளுக்குப் பிடித்தமான குழந்தை எனக் குறிப்பிட்டுள்ளார்.


17 வயதில் த்ரிஷா 'மிஸ் சென்னை' போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் கூட அவருக்கு இப்போது எப்படியும் 34 வயதாவது இருக்கும். இந்த வயதிலும் இன்னமும் 17 வயது பெண் போலவே தோற்றமளிக்கும் வயதில் தன்னுடைய உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறார் என்பது மற்ற ஹீரோயின்களுக்கும் பொறாமை தரக் கூடிய விஷயமாகவே இருக்கும்.


தமிழில் ரஜினிகாந்தைத் தவிர ஏறக்குறைய அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார். தமிழ், தெலுங்கு ரசிகர்கள் த்ரிஷாவை எப்போதும் மறக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவருக்கான பெயரை பல வெற்றிப் படங்களும், பல முன்னணி ஹீரோக்கள் படங்களும் சொல்லிக் கொண்டேயிருக்கும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in