ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகில் தற்போது கடுமையான கதாநாயகிகள் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. த்ரிஷா ஏறக்குறைய ரிட்டையர்மென்ட் ஸ்டேஜுக்கு வந்துவிட்டார். நயன்தாராவிற்கு கொடுக்கும் சம்பளத்திற்கு ஒரு சிறிய பட்ஜெட் படத்தையே எடுத்துவிடலாம். ஹன்சிகாவின் ஹாட் ரவுண்ட் அதற்குள் முடிவுக்கு வந்துவிட்டது. ஸ்ருதிஹாசன் ஒரு மொழியில் கூட தனி கவனம் செலுத்த மாட்டார். அனுஷ்கா, தமன்னா 'பாகுபலி'யிலிருந்து மீண்டு வந்தால்தான் அடுத்தடுத்து படங்களில் நடிக்க முடியும். அதற்கு இன்னும் மூன்று மாதங்களாவது ஆகும். காஜல் அகர்வால் அஜித், விஜய் என மேலே மேலே போய்க் கொண்டிருக்கிறார்.
இதனால் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை ஹீரோக்களுடன் நடிக்க பொருத்தமான கதாநாயகிகள் கிடைக்கவில்லை. தெலுங்கு, ஹிந்தியில் ஒரு சில படங்களை நடித்த நடிகைகளைத் தேடிப் பிடித்து தமிழுக்கு அறிமுகப்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். அந்த வரிசையில் தற்போது தெலுங்கில் கிளாமருக்கும் சேர்த்து பெயர் பெற்ற ராஷி கண்ணாவை தமிழுக்கு அழைத்து வர இருக்கிறார்கள். 'டிமான்ட்டி காலனி' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் 'இமைக்கா நொடிகள்' படத்தில் அதர்வா ஜோடியாக நடிக்க ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
ஹிந்தியில் வெளியான 'மெட்ராஸ் கபே' படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ராஷி கண்ணா. அடுத்து 'ஊஹலு குசகுசலுடே' என்ற படத்தில் நாகசௌரியா ஜோடியாக நடித்து தெலுங்கில் அறிமுகமனார். தொடர்ந்து சில தெலுங்குப் படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா நடித்து நேற்று 'ஹைப்பர்' படம் வெளியாகியுள்ளது.
தமிழில் அறிமுகமாகும் ராஷி கண்ணா, சித்தார்த் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல். இதில் எந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகப் போகிறது என்பது விரைவில் வரும் அறிவிப்பு மூலம் தெரிய வரும்.