‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஆஸ்திரேலியாவில் வாழும் பெங்களூர் பொண்ணு ஆஷிமா. சிறுவயதிலிருந்தே நடனத்தின் மீது ஆர்வம். அதனால் முறையாக நடனம் கற்றார். நன்றாக ஓவியமும் வரைவார். முறைப்படி அந்த கலையையும் கற்றுள்ளார். 2015ம் ஆண்டு சிட்டினியல் நடந்த மிஸ்.ஆஸ்திரேலியா அழகு போட்டியில் டைட்டில் வென்ற ஆஷிமா, அதே ஆண்டில் மிஸ்.இண்டியா குளோபல் போட்டியில் டைட்டில் வென்றார்.
அதன்பிறகு மாடலாக உலா வந்தார். சில விளம்பர படங்களில் நடித்தார். பியார்கே தாரா என்ற இந்தி இசை ஆல்பத்தில் ஆடினார். ஆஷிமாவுக்கு தற்போது சினிமாவில் நடிக்கும் ஆசை வந்திருக்கிறது. இதற்கு முன் வந்த நிறைய வாய்ப்புகளை மறுத்துவிட்டார். பெரிய ஹீரோ, பெரிய இயக்குனர்கள் படத்தில் நடிக்க விரும்புகிறார். சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு தனியார் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த ஆஷிமா இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட முக்கிய இயக்குனர்களை சந்தித்து பேசியிருக்கிறார். விரைவில் ஒரு தமிழ் படத்தில் ஆஷிமா நடிக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.