ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய்சேதுபதி நடித்த றெக்க படம் தணிக்கை குழுவினருக்கு திரையிடப்பட்டது. எதிர்பார்த்தது போலவே றெக்க படத்குக்கு யு சான்றிதழ் கிடைத்திருக்கிறது. அக்டோபர் 7-ஆம் தேதி றெக்க படம் ரிலீசாகவிருக்கிறது. இதே தேதியில் ரிலிஸ் ஆக உள்ள சிவகார்த்திகேயன் நடித்து தயாரிக்கும் 'ரெமோ' படத்துக்கும் சென்சாரில் 'யு' சான்றிதழ்தான் கிடைத்திருக்கிறது.
இந்நிலையில் அதே தினம் வெளியாகவிருப்பதாக சொல்லப்பட்ட பிரபுதேவா நடிப்பில் ஹிந்தியில் எடுக்கப்பட்ட டெவில் படத்தின் தமிழ் டப்பிங்கான 'தேவி' படத்துக்கும் சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. பிரபு தேவாவும், தமன்னாவும் இணைந்து நடித்துள்ள தேவி படம் அறிவித்தபடி அக்டோபர் 7 அன்று வெளியானால் அன்றைய தினம் வெளியாகும் 3 படங்களும் யு சான்றிதழ் பெற்ற படங்கள் என்ற பெருமை கிடைத்திருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் போதிய தியேட்டர்கள் கிடைக்காமல் போனதால் தேவி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துவிட்டதாக தற்போது தகவல் வருகிறது.