மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
விசு இயக்கத்தில் 1982-ல் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 'மணல்கயிறு'. குடும்பம் ஒரு கதம்பம் படத்துக்கு விசு நடித்த இப்படத்தில் விசு உடன், அவரது சகோதரர் கிஷ்மு, மனோரமா, சாந்திகிருஷ்ணா உட்பட பலரும் நடித்திருந்தனர். இந்தப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் ஆகின்றன. ஏற்கனவே வெற்றியடைந்த படங்களின் இரண்டாம் பாகம் எடுப்பது தற்போது டிரெண்டாக உள்ளது.
அந்த அடிப்படையில் மணல் கயிறு படத்தின் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர். 'மணல்கயிறு-2' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த விசுவும் நடித்திருக்கிறார். சிரிப்பு நடிகர் எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். பூர்ணா கதாநாயகியாக நடித்துள்ளார். 'ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்' நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்தவிட்ட இப்படம் நேற்றைய முன்தினம் சென்சாருக்கு சென்றது. 'மணல்கயிறு-2'விற்கு 'யு' சர்ட்டிஃபிக்கேட் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தை அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த தலைமுறையைச் சேர்ந்த ரசிகர்களுக்கு மணல் கயிறு படம் பற்றி அவ்வளவாக தெரியாது. இந்நிலையில் மணல்கயிறு-2 படத்துக்கு மக்கள் எந்தளவுக்கு வரவேற்பு கொடுப்பார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்...!