மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
பாலிவுட்டில் உள்ள நடிகர்களில் நல்ல கட்டுடலுடன் கூடிய நடிகர் ஜான்ஆபிரஹாம். தற்போது இவர் போர்ஸ் 2 படத்தில் நடித்து வருகிறார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது ரசிகர் ஒருவரின் டார்ச்சரால் பொறுமையிழந்த ஜான், அவரை கன்னத்தில் அறைந்துவிட்டார். போர்ஸ் 2 டிரைலர் வெளியீட்டு விழா முடிந்ததும் ஜான், தனது காரில் ஏற முயன்றார். அப்போது ஏராளமான ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முயன்றனர். அதில் ஒரு ரசிகர் ஜானின் தோளை பிடித்து அமுக்கி செல்பி எடுக்க முற்பட்டிருக்கிறார். இதில் கோபமான ஜான், அந்த ரசிகரை சற்றென்று கன்னத்தில் அறைந்துவிட்டு விர்ரென... காரில் ஏறி பறந்தார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் ஒருவித அதிர்ச்சியுடன் கூடிய அதிருப்தியை ஏற்படுத்தியது.