புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
பெங்கால் டைகர் படத்தில் ரவிதேஜாவுடன் இணைந்து நடித்த ராக்ஷி கண்ணா மீண்டும் ரவிதேஜா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். தொடர் தோல்விப்படங்களால் துவண்டிருந்த ரவி தேஜா இயக்குனர் பாபி மற்றும் விக்ரம் ஸ்ரீ இயக்கும் படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இதில் பாபி இயக்கும் திரைப்படத்தின் பணிகள் முதலில் துவங்கியுள்ளன. அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் ரவிதேஜாவிற்கு ஜோடியாக நடிகை ராக்ஷி கண்ணா நடிக்கவுள்ளாராம். பவன் கல்யாண் நடிப்பில் சர்தார் கபார் சிங் படத்தை இயக்கிய இயக்குனர் பாபி மீண்டும் ஆக்ஷன் கதை தேர்வு செய்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்புகள் அக்டோபரில் துவங்கவுள்ளன. தயாரிப்பாளர் ராம் தல்லூரி இப்படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளாராம். விரைவில் இப்படத்தின் பூஜை நடைபெறும் என கூறப்படுகின்றது.