'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவா ஜோடியாக அறிமுகமானவர் அனுயா, அதன்பிறகு மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபுரம், படங்களில் நடித்தார், நண்பன், நான், படங்களில் குணசித்திர நடிகையாக நடித்தார். மிகுந்த எதிர்பார்ப்போடு தமிழ் சினிமாவுக்கு வந்தவரால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. இதனால் பெங்காலி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இந்த நிலையில் தமிழில் சின்னத்திரைக்கு திரும்பி இருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் ஆடப்போகும் செலிபிரிட்டிகளில் அனுயாவும் ஒருவர். அனுயா தமிழ் டி.விக்குதான் புதிதே தவிர சின்னத்திரை அவருக்கு புதிதல்ல. இந்தி தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஏக்தா ரஷ்டி என்ற சரித்திர தொடரில் மகராணியாக நடித்துள்ளார். டான்ஸ் ஜோடி டான்ஸ் மூலம் சின்னத்திரைக்கு வந்துள்ள அனுயா, தொகுப்பாளர், சீரியல் நடிகை என பல அவதாரங்களை எடுக்க காத்திருக்கிறார்.