ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இயக்குனர் பாரதிராஜா, இப்போது நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்த துவங்கி விட்டார். பாண்டிய நாடு படத்தில் விஷாலுக்கு தந்தையாக நடித்த அவர், இப்போது, குரங்கு பொம்மை படத்தில், விதார்த்துக்கு தந்தையாக நடிக்கிறார். குறும்படங்களை இயக்கி, பிரபலமான நித்திலன் என்பவர் தான், இந்த படத்தை இயக்குகிறார். 'மனிதன் மனது, ஒரு குரங்கு; நிலையில்லாதது என்பதை சிம்பாலிக்காக சொல்வதற்காகத் தான், இந்த படத்துக்கு குரங்கு பொம்மை என பெயர் வைத்துள்ளோம்' என்கிறது படக்குழு. இந்த படத்துக்காக, மீசை இல்லாமல், கல்லுாரி மாணவர் போன்ற தோற்றத்தில் நடித்துள்ளார் விதார்த்.