'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வாகா படத்தை அடுத்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் வீரசிவாஜி. விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஜித்தின் மச்சினி ஷாம்லி நடித்திருக்கிறார். மற்றும், ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் வீரசிவாஜி படத்தை கணேஷ் விநாயக் இயக்கியிருக்கிறார். இவர் அருள்நிதியை வைத்து ஏற்கனவே தகராறு என்ற தோல்விப்படத்தை இயக்கியவர். இமான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. செப்டம்பர் 23-ம் தேதி இப்படம் வெளியாகும் என ஏற்கனவேஅறிவிப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட இப்படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் யு சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். தணிக்கை முடிவுற்ற பிறகும் படத்தை வெளியிட முடியவில்லை.
விக்ரம் பிரபுவுக்கு சுமார் ஒரு கோடி சம்பள பாக்கியைக் கொடுக்க வேண்டும். அதையே கொடுக்க முடியாமல் திணறி வரும் தயாரிப்பாளர் படத்தை ரிலீஸ் செய்யவும் பணம் இல்லாததினால் வீரசிவாஜி பட ரிலீஸ் தேதியை டிசம்பர் மாதத்துக்கு தள்ளி வைத்துவிட்டாராம்.
இது குறித்து வீரசிவாஜி படக்குழுவினரிடம் கேட்டால், தொடர்ச்சியாக படங்கள் வெளியாகி வருவதால் தற்போது வீரசிவாஜி படத்தின் வெளியீடு தீபாவளி முடிந்தவுடன் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். நவம்பர் மாத வெளியீடாக திரைக்கு கொண்டு வருவோம் என்கிறார்கள்.