ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியாவின் செல்லக்குரல், பாடும் வானம்பாடி லதா மங்கேஷ்கரின் பிறந்த நாள் இன்று. பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் குறித்த சில நினைவுகள்...
பள்ளிக்கு அதிகம் சென்றிராத லதா மங்கேஷ்கர், தந்தையின் நாடகங்களில் பாடல் பாடி நடித்தார். சங்கீதத்தை முறையாக பயின்றார். 13 வயதில் தந்தை இறந்து விட குடும்ப வறுமையை சமாளிக்க திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். கூடவே பாடவும் செய்தார்.
மஜ்பூர் என்ற படத்தில் முதல் திரைப்பட பாடலை பாடினார். தொடர்ந்து பர்சாத், அந்தாஸ், துலாரி, மஹால், படங்களில் இவர் பாடிய பாடல்கள் ஹிட்டானதும் நட்சத்திர பாடகி ஆனார். கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பாடிவிட்டார். அந்தந்த மொழியின் உச்சரிப்புக்கு ஏற்ப பாடுவது இவர் சிறப்பு.
20 மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்தார். ஆயிரம் இந்தி படங்களுக்கு பாடியுள்ளார். 1989ல் சினிமா உலகின் மிகப்பெரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வெற்றார். 2001ல் இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரதரத்னா பெற்றார். 6 முன்னணி உலக பல்கலைகழங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்கி உள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.
87 வயதை நிறைவு செய்த பின்னரும் கொஞ்சமும் குரல் மாறாமல் இப்போதும் பாடிக் கொண்டிருக்கிறார் மெலடி குயின் லதா மங்கேஷ்கர். பாடலில் உலக சாதனை படைத்தவர். ஆயுளிலும் உலக சாதனை படைக்க நாமும் வாழ்த்துவோம்.