‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
'ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட்' எல்ரெட் குமார் தயாரிப்பில் வெளியான கோ உள்ளிட்ட ஒரு சில பல படங்கள் தவிர மற்ற படங்கள் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. அதிலும் குறிப்பாக ஜீவா நடித்த யான் படம் படு தோல்வியை தழுவியது. கிருஷ்ணா நடிப்பில் வெளியான 'யாமிருக்க பயமே' படம் மட்டும் ஓரளவு லாபம் சம்பாதித்து கொடுத்தது.
தற்போது ஜீவா, காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் 'கவலை வேண்டாம்' தயாரித்து வருகிறார் எல்ரெட் குமார். இந்தப் படத்துடன் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார் எல்ரெட் குமார். அறிமுக இயக்குனர் ராஜாராம் இயக்கும் இந்தப்படத்திற்கு ரஜினி படத்தின் டைட்டிலான 'வீரா' என்று பெயர் சூட்டியுள்ளனர். இப்படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக, ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். 'கவலை வேண்டாம்' பட வெளியீட்டிற்கு பிறகு அதாவது இந்த ஆண்டு இறுதியில் வீரா படம் வெளியாகுமாம்.