தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ரெமோ. சிவகார்த்திகேயன் நடிப்பிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள படமும் கூட. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது காரணம், படத்தில் சிவகார்த்திகேயனின் அசத்தலான நர்ஸ் வேடம் தான். ஏற்கனவே படத்தின் பாடல்கள், டிரைலர்கள் எல்லாம் செம ஹிட்டாகியுள்ள நிலையில் படத்தின் ரிலீஸ்க்கான வேலைகள் மும்முரமாய் நடந்து வருகிறது.
இந்நிலையில், ‛ரெமோ' படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் எந்த கட்டும் கொடுக்காமல் ‛யு' சான்று கொடுத்துள்ளனர். யு சான்று கிடைத்திருப்பதால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து படக்குழுவினர், படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். படம் வருகிற அக்., 7-ம் தேதி ரிலீஸாக உள்ளது.