ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வா டீல் படத்தை இயக்கிய ரத்தின சிவா, விஜய் சேதுபதியை கொண்டு இயக்கியுள்ள படம் றெக்க. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். விஜய் சேதுபதி கொஞ்சம் கமர்ஷியலாக ஆக்ஷ்ன் ரோலில் எல்லாம் நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய விஜய்சேதுபதி...
ஒரு வருடம் முடிவதற்குள்ளேயே 6 படத்தில் நடித்துவிட்டேன் என்று எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். எனக்கே கொஞ்சம் ஒரு மாதிரியாகத்தான் உள்ளது. இரண்டு வாரத்திற்கு ஒரு படம் ரிலீஸாகிறது என்று எண்ணும்போது காமெடியாக தெரிகிறது. பணத்திற்காக இவ்வளவு படங்களில் நடிக்கவில்லை. றெக்க படம் ஒரு பேண்டஸியான ஆக்ஷ்ன் திரைப்படம். நான் இன்னொருவரை அடித்தாலே ஓடிவிடுவேன், இதில் நான் ஹரீஸ் உத்தமனை தூக்கி போட்டு அடித்திருக்கிறேன். வா டீல் படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு ரத்தின சிவா படத்தில் நடிக்க சம்மதம் சொன்னேன்.
பொதுவாக கதை தவறாக இருந்தால் கழுவி கழுவி ஊற்றுவார்கள், ஆனால் இந்தப்படத்தில் நடிக்கும்போதே எனக்கே ஒரு போதை உணர்வை தந்தது. இந்தப்படத்தில் ஆக்ஷ்ன் காட்சியில் நடிக்க தான் கொஞ்சம் சிரமப்பட்டேன், ஏனென்றால் ரியலாக நடிப்பது போன்று ஆக்ஷ்ன் செய்ய வேண்டும். நான் 6 படம் நடிக்கிறேன் என்று கேட்கிறார்கள், ஆனால் சிதீஷ் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாக உள்ளது. என்னுடைய படத்தில் அவர் நடித்தது நான் செய்த புண்ணியம்.
லட்சுமி மேனன் பார்க்க சின்ன பொண்ணு மாதிரி தான் இருக்கிறார், ஆனால் ஒரு காட்சி, கதையை உள்வாங்கி அருமையாக நடிப்பவர். கிஷோரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த போதே அவரை எனக்கு தெரியும். அப்போது எப்படி பழகினாரோ இப்போதும் அப்படியே தான் பழகினார்.
ஒரே மாதிரியாக நடித்தால் நமக்கே போரடித்துவிடும், அதனால் படத்திற்கு படம் வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். சிவகார்த்திகேயன் என்னுடைய சமகாலத்து நடிகர், அவருடன் எந்த ஈகோவும் கிடையாது.
இவ்வாறு விஜய் சேதுபதி கூறினார்.