டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட்டின் இரு முன்னணி நடிகர்கள் ஷாரூக்கானும், ஹிருத்திக் ரோஷனும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. தற்போது இயக்குநர் ராகுல் தொலாக்கியா இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து வரும் படம் ‛ரயீஸ்', இப்படத்தில் ஷாரூக், கள்ளச் சாரயம் விற்பவராக நடித்து வருகிறார். அதேசமயத்தில் இயக்குநர் சஞ்சய் குப்தா இயக்கத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்து வரும் படம் ‛காபில்'. இந்த இரண்டு படங்களும் ஒறே நாளில் வெளியாக இருக்கிறது. இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் ஹிருத்திக்கிடம் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவதை பற்றி கருத்து கேட்டனர்.
இதற்கு ஹிருத்திக் கூறியதாவது.... "அடுத்த நடிகர்களின் நெறிமுறைகளில் நான் தலையிட மாட்டேன். நான் என் சொந்த பாதை வழிகாட்டுதலின்படி தான் நடப்பேன். இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸாவதால் வசூலில் பாதிப்பு ஏற்படலாம். ஆனால் இரண்டு படமும் நன்றாக வசூலிக்கும் என்று நம்புகிறேன். படம் வெற்றி அடைந்தாலும், தோல்வி அடைந்தாலும் எல்லோரும் அதை ஏற்று கொள்ள வேண்டும்" என்றார்.
‛காபில்' மற்றும் ‛ரயீஸ்' படங்கள் அடுத்த ஆண்டு, ஜனவரி 26ஆம் தேதி வெளியாக இருக்கிறது.