விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
சினிமாவை பொறுத்தவரை திறமை என்பது யாரிடத்தில் ஒளிந்திருக்கிறது என்பதை அவர்கள் பார்க்கும் வேலையை மட்டும் வைத்து கணக்கிட முடியாது. காரணம் அவர்கள் தேடி வந்த வேலை ஒன்றாகவும் தற்போது பார்க்கும் வேலை ஒன்றாகவும் சூழல் காரணமாக மாறி அமைந்திருக்கலாம். ஆனால் அதை இனம் கண்டுபிடித்து ஊக்குவிப்பவர்கள் வெகு சிலரே.. அப்படி ஒருவர் தான் மலையாள நடிகர் திலீப்பும்.. ஆம்.. தனது படத்தில் பணியாற்றிய மேக்கப் பையன் ஒருவரை தனது இன்னொரு படத்தில் பாடலாசிரியர் ஆக்கியுள்ளார் திலீப்..
கடந்த ஏப்ரல் மாதம் திலீப் நடித்த 'கிங் லையர்' படம் வெளியானதல்லவா..? அதில் திலீப்பின் ஹேர்ஸ்டைல், பிரெஞ்ச் தாடி ஆகியவற்றை கவனிப்பதற்கென்றே தனியாக நிதின் என்கிற ஒரு மேக்கப் பையன் வேலைக்கு அமர்த்தப்பட்டாராம். அப்படி திலீப்புக்கு சிகையலங்காரம் பண்ணும்போது தானாகவே உருவாக்கிய 'ஏர்லி இன் தி மார்னிங்' என்கிற பாடல் ஒன்றை அடிக்கடி நிதின் பாடுவது வழக்கமாம். அந்தப்பாடல் திலீப்புக்கு பிடித்துப்போகவே, அந்தப்பாடலை வேறு யாருக்கும் கொடுக்கவேண்டாம் என அவரிடம் அப்போது கேட்டுக்கொண்டாராம். அதுமட்டுமல்ல, அந்தப்பாடலை, தான் அடுத்ததாக நடித்து, சமீபத்தில் வெளியான 'வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்' படத்தில், தனது நண்பரும் 'மர அக்பர் ஆண்டனி' பட இயக்குனருமான நாதிர்ஷவை வைத்து பாடவும் வைத்து மேக்கப் பையனுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்துவிட்டார் திலீப்.