ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
விஜய் நடித்த கத்தி படத்தில் அவரது தங்கை வேடத்தில் நடித்தவர் அனுகிருஷ்ணா. அதற்கு முன்பே 4 படங்களில் நாயகியாக நடித்துள்ள இவர், தற்போது சாட்டை யுவன் நாயகனாக நடித்துள்ள இளமி படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இளமி என்கிற டைட்டீல் வேடத்திலேயே நடித்திருக்கும் நான் இந்த படத்திற்காக ஜாக்கெட் அணியாமல் 13ஆம் நூற்றாண்டு பெண்ணாக மாறி நடித்தேன் என்கிறார் அனுகிருஷ்ணா.
இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி அவர் கூறுகையில், இளமி படத்தில் நான் இளமியாக நடிக்கிறேன். காதல், ஆக்சன் கலந்த கதையில் இந்த படம் உருவாகியிருக்கிறது. ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, தலக்கோணம் பகுதிகளில் செட் போட்டு படமாக்கப்பட்டுள்ளது. மதுரை மண்வாசனை கதை என்பதால் முதன்முதலாக நான் மதுரை தமிழில் பேசி நடித்திருக்கிறேன்.
மேலும், ஆக்சன் சம்பந்தப்பட்ட கதை என்றாலும், இந்த படத்தில் காதலுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் இயக்குனர் ஜூலியன் பிரகாஷ். அந்த வகையில், இன்னொரு கும்கி என்று சொல்லும் அளவுக்கு இந்த படத்தில் காடு, மலைப்பகுதிகளில் சுற்றித்திரியும் காதல் ஜோடியாக நானும், யுவனும் நடித்துள் ளோம். முக்கியமாக 13ஆம் நூற்றாண்டு படம் என்பதால் அந்த காலகட்டத்து பெண்ணாக ஜாக்கெட் அணியாமல் நடித்துள்ளேன். அதோடு, எனக்கு எமோசனல் காட்சிகளும் நிறையவே உள்ளது. இதனால் இந்த படத்தில் என்னிடமிருந்து அழுத்தமான பர்பாமென்ஸ் வெளிப்பட்டுள்ளது. அதனால் இந்த படமே தமிழ் சினிமாவில் எனக்கு திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் அனுகிருஷ்ணா.