‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை விரைவில் காதல் திருமணம் புரியவிருக்கும் சமந்தா இந்து மதத்திற்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த சமந்தா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்கின்றார். சமந்தாவும் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவும் காதலித்து வருகின்றனர். இந்து மதத்தைச் சேர்ந்த நாகசைதன்யாவை திருமணம் செய்யவிருப்பதால் சமந்தாவும் இந்து மதத்திற்கு மாறிவிட்டாராம். சமந்தா நாகசைதன்யா ஜோடி நாகார்ஜூனாவுடன் பூஜையில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இந்த மத மாற்ற சர்ச்சையை கிளப்பியுள்ளன. நெற்றியில் குங்குமத்துடன் காணப்படும் சமந்தா புகைப்படங்களுக்கு மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்துள்ளார்.