பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள சினிமாவை பொறுத்தவரை இதுநாள்வரை மெகா பட்ஜெட் படமாக இருப்பது மம்முட்டி நடித்த 'பழசிராஜா' தான்.. ஆனால் தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகிவரும் 'புலிமுருகன்' அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக அந்தப்படத்தை விட மும்மடங்கு பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறது.. தோமிச்சன் முளகுபடாம் என்பவர் இந்தப்படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருவதுபோலவே, இந்தப்படத்தின் ரிலீஸையும் பிரமாண்டமாக செய்வதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறாராம். இதுவரை மலையாள சினிமாவில் இல்லாதவகையில் சுமார் 3000 தியேட்டர்களில் இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறாராம்..
தென்னிந்திய மொழிப்படங்களில் ஷங்கர் இயக்கிய 'ஐ' மற்றும் ரஜினியின் 'கபாலி' ஆகியவை மட்டுமே 3000மற்றும் அதற்கு அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் பண்ணப்பட்டன. ஆனால் என்னதான் மோகன்லால் நடித்தாலும் கூட ஒரு மலையாளப்படத்தை 3000 தியேட்டர்களில் பண்ணுவது சாத்தியம் தானா என்கிற சந்தேகம் எழவே செய்யும்.. ஆனால் சீனா மற்றும் வியட்நாமில் மட்டுமே 2000 தியேட்டர்களில் 'புலிமுருகன்' படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் தயாரிப்பாளர் தோமிச்சன்.