Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்புக்குட்டிக்கு வாழ்த்து சொன்ன அஜித்!

26 செப், 2016 - 09:27 IST
எழுத்தின் அளவு:
ajith-gave-a-greeting-to-appukutty

அஜித் நடித்த வீரம் படத்தில் அவரது வீட்டில் வேலை செய்பவராக நடித்திருந்தார் அப்புக்குட்டி. அதையடுத்து அப்புக்குட்டிக்கு தானே போட்டோசெஷன் நடத்தி அவரது கெட்டப்பையே மாற்றிக்காட்டினார் அஜித். மேலும், அப்புக் குட்டியின் நிஜ பெயரான சிவபாலனையும் அவரது பெயருடன் சேர்த்துக்கொள்ளுமாறு அட்வைஸ் கொடுத்தார் அஜித். அதிலிருந்து சிவபாலன் என்கிற அப்புக்குட்டியாகி விட்டார் அவர்.


இதுபற்றி அப்புக்குட்டி மேலும் கூறுகையில், அஜித் சாருக்கு மற்றவர்களுக்கு உதவும் குணம் அதிகமாக உள்ளது. அதனால்தான் அவர் படத்தில் நடித்த எனக்கு போட்டோசெஷன் நடத்தி எனது கெட்டப்பையே மாற்றி விட்டார். இதற்கெல்லாம் மேலாக தற்போது நான் நாயகனாக நடித்துள்ள காகித கப்பல் படத்தின் ஆடியோ விழா நடந்தபோது எனக்கு வாழ்த்து சொன்னார் அஜித் சார். ஒரு மிகப்பெரிய ஸ்டார் அவர். என்னை வாழ்த்தியது ரொம்ப பெருமையாகவும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது என்கிறார் அப்புக்குட்டி.


இப்படி சொல்லும் அப்புக்குட்டி காகிதக்கப்பல் படத்தில் முதன்முறையாக நடனமாடியது பற்றி கூறும்போது, காகித கப்பல் படத்தில் வித்தைக்காரி வித்தைக்காரி என்ற டூயட் பாடலில் முதன் முதலாக ஆடியிருக்கிறேன். முதல் பாடல் என்றாலும் முடிந்தவரை நன்றாகவே ஆடியிருக்கிறேன். ரசிகர்களும் எனது நடனத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.


மேலும், அம்மா அப்பாவ முதல்ல பாரு, அதுக்கு அப்புறம்தான் சினிமா ஸ்டாரு என்றொரு பாடல் இந்த படத்தில் உள்ளது. அஜித் சார் ரசிகர்களுக்கு சொல்லிக்கொள்ளும் விசயங்களை மையமாக வைத்து இந்த பாடல் இடம் பெற்றுள்ளது. அனைத்து ரசிகர்களுக்கும் இந்த பாடல் ரொம்ப பிடித்தமானதாக இருக்கும் என்கிறார் அப்புக்குட்டி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in