ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் சூர்யா, விக்ரம், பரத், அருண் விஜய், விஷால், அதர்வா என பல நடிகர்கள் சிக்ஸ்பேக் வைத்து நடித்தனர். அது ஒரு சிக்ஸ்பேக் சீசனாகவும் இருந்தது. இப்போது எந்த ஹீரோக்களும் சிக்ஸ்பேக் கெட்டப்புக்கு மாறுவதில்லை. ஆனால், சில வடக்கத்திய வில்லன்கள் சிக்ஸ்பேக்குடன் ரவுண்டு கட்டி வருகின்றனர். அந்த வரிசையில், இப்போது வில்லன் அவதாரம் எடுத்துள்ள டைரக்டர் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்திருக்கிறார்.
இசை படத்தை இயக்கி நடித்த அவர், அடுத்தபடியாக படம் இயக்குவதில் இருந்து விடுபட்டு முழுநேர நடிகராகியிருக்கிறார். அந்த வகையில், வை ராஜா வை, யட்சன், இறைவி என பல படங்களில் நடித்த அவர், தற்போது மகேஷ்பாபுவைக்கொண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் முதன்முறையாக வில்ல னாகியிருக்கிறார். முதல் படத்திலேயே அதிரடி வில்லனாக உருவெடுக்கும் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் சிக்ஸ்பேக் கெட்டப்பில் நடிக்கிறாராம்.
அதன்காரணமாக, கடந்த சில மாதங்களாகவே ஜிம் சென்று கடின உடற்பயிற்சி மூலம் எடை குறைத்து வந்த அவர் தற்போது சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கு மாறி விட்டாராம். இதையடுத்து மகேஷ்பாபுவுடன், எஸ்.ஜே.சூர்யா மோதிக்கொள்ளும் அதிரடியான சண்டை காட்சியை படமாக்க தயாராகிக்கொண்டிருக்கி றாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.