பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, உருவாகியுள்ள எம்.எஸ்.தோனி திரைப்படம் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று(செப்டம்பர் 24) ஐதராபாத்தில் நடைபெற்றது. பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலி இவ்விழாவில் கலந்து கொண்டு தோனியுடன் இணைந்து பாடல்களை வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய தோனி, தான் பாகுபலி - 2 படத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினார். மேலும் தான் ஐதராபாத் பிரியாணியின் தீவிர ரசிகர் என்று கூறிய தோனி தனது மனைவி, ஷுடி பஜார் வலையள்களுக்கு தீவிர ரசிகை என்றும், இருவரும் ஐதராபாத் வந்தால் இவற்றை தவறவிடுவதில்லை என்றும் கூறினார். நீரஜ் பாண்டே இயக்கத்தில் செப்டம்பர் 30ல் திரைக்கு வரவிருக்கும் எம்.எஸ்.தோனி படத்தில், ஹிந்தி நடிகர் சுஷ்காந்த் சிங் ராஜ்புட் தோனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.