பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் ஒருவராக, 20 வருடத்திற்கு மேல் முன்னணியில் இருப்பவர் ஷாரூக் கான். தற்போது இயக்குநர் ராகுல் தோலாகிய இயக்கத்தில் ஷாரூக் கான் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛ரயீஸ்'.‛ரயீஸ்'படம் கள்ளச் சாராயம் விற்பவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளது. இதல் ஷாரூக் கள்ளச் சாராயம் விற்பவராக நடித்து வருகிறார். மஹிரா கான் மற்றும் நவாசுதின் சித்திக் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றார்கள்.
இதனிடையே ஷாரூக், இயக்குநர் கரண் ஜோஹர் இயக்கத்தில் ஆலியாபட் நடித்து வரும் ‛டியர் ஜிந்தகி' படத்தில் டாக்டராக ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ‛டியர் ஜிந்தகி' படத்துடன் '‛ரயீஸ்'படத்தின் டிரைலரை வெளியிட போவதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்து உள்ளது.