தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கப்பல் படத்தை இயக்கிய கார்த்திக் ஜி.கிருஷ் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் சித்தார்த் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தற்போது தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ராசி கண்ணா நடிக்கிறார். இவர்கள் தவிர வம்சி கிருஷ்ணா, கருணாகரன், தம்பி ராமய்யா, யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். இதனை சித்தார்த் தயாரிக்கிறார். படத்தின் தலைப்பு சைத்தான் கா பச்சா.
"இது இந்தி வார்த்தையாக இருந்தாலும் தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. தப்பு மேல் தப்பு செய்யும் ஒருவனை இந்த வார்த்தை கொண்டுதான் திட்டுவார்கள். இது காமெடி படம் அதுதான் ஒரு நடைமுறை வாக்கியத்தை தலைப்பாக்கினோம். இந்தியில் வைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை" என்று விளக்கம் சொல்கிறார்கள் படத் தரப்பினர். சித்தார்த் இதற்கு முன் தயாரித்த படத்தின் பெயர் ஜில் ஜங் ஜக் என்பது குறிப்பிடத்தக்கது.