மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அஜித், விஜய் ஆகிய இரண்டு நடி கர்களும் ஒருவர் 45வது படமென்றால், இன்னொருவரும் 45வது படத்தில்தான் நடித்து வந்தனர். அதேபோல் அவர்கள் நடித்த சில படங்கள் ஒரே நாளில் வெளியானதால் அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது. ஆனால் பின்னர், ஒருகட்டத்தில் வருடத்திற்கு இரண்டு படங்களில் நடித்து அஜித்தை விட எண்ணிக்கையில் அதிக படங்களை தொட்டார் விஜய். இதனால் அந்த பழைய பரபரப்பு குறைந்து போனது.
இந்த நிலையில், தற்போது அஜித் தனது 57வது படத்தில் நடித்து வருகிறார். விஜய் தனது 60-வது படமான பைரவாவில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் விஜய் படம் பொங்கலுக்கு திரைக்கு வருவது உறுதியாகி விட்டது. ஆனால் அஜித் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பே இப்போதுதான் முடிந்திருக்கிறது. இன்னும் டைட்டீலும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், விஜய்யின் 60வது படம் பைரவா பொங்கலுக்கு ரிலீசாகும்போது தனது ரசிகர்கள் ஏமாற்றமடைந்து விடக்கூடாது என்பதற்காக, தனது 57வது படத்தின் பர்ஸ்ட்லுக்கை பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்திருக்கிறாராம் அஜித். ஆக, ஏதோ ஒரு வகையில் மீண்டும் அஜித்-விஜய் இருவரும் ஒரே நாளில் மோதிக்கொள்கிறார்கள்.