ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
இது என்ன மாயம், ரஜினிமுருகன் படங்களுக்குப்பிறகு தனுசுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தொடரி படம் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டி ருக்கிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கு சினிமா வட்டாரங்களில் பாராட்டுகளும், தியேட்டர்களில் பலத்த கைதட்டல்களும் கிடைத்து வருகிறது. அதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அதன்காரணமாக தற்போது நடித்து வரும் ரெமோ, பைரவா படங்கள் வெளியாகும்போது இன்னும் தனது நடிப்புக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார் அவர்.
அதோடு, இந்த படங்களுக்குப்பிறகு தமிழில் சூர்யா, விஜயசேதுபதி ஆகிய நடிகர்களுடன் நடிக்க கமிட்டாகியிருக்கும் அவர், தெலுங்கில் அல்லு அர்ஜூனா, நானி ஆகிய நடிகர்களுக்கும் ஜோடியாக நடிக்கிறார். இதையடுத்து மேலும் சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டுள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது கமிட்டாகியுள்ள படங்களின் கால்சீட் தேதிகள் இன்னும் உறுதிபடுத்தப்படாததால் அதன் பிறகே புதிய படங்களை ஓகே பண்ணுவாராம்.